டாப் 10 நியூஸ்: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் கோட் டிரெய்லர் அப்டேட் வரை!

அரசியல்

அமைச்சரவை கூட்டம்!

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

விசிக ஆர்ப்பாட்டம்!

எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கோட் டிரெய்லர் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.

உலக உடல் உறுப்பு தான தினம்!

உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் உறுப்புகளை தானமாக வழங்குவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்று உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கொட்டுக்காளி டிரெய்லர் ரிலீஸ்!

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

வினேஷ் போகத் வழக்கு!

ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது சர்வதேச விளையாட்டு போட்டி நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 149-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கனடா – அமெரிக்கா மோதல்!

இன்றைய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கனடா – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் ரிலீஸ்!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கற்பூரவள்ளி சட்னி

அவிங்களுக்கு என்ன அவசரமோ? : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *