திருத்தணி அறிவுசார் மையம் திறப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
போதையில்லா பாரதம்!
போதைப்பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதையில்லா பாரதம் இயக்க உறுதிமொழியை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் விரேந்திர குமார் டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, இன்று முதல் மருத்துவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இருசக்கர வாகன பேரணி!
சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடி பொருத்தப்பட்ட இருசக்கர வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது.
உலக தமிழ்மொழி வளர்ச்சி மாநாடு!
இரண்டாவது உலக தமிழ்மொழி வளர்ச்சி, ஆய்வு மாநாடு சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
ஒருநபர் ஆணையம் விசாரணை!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் .
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 148-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கலான் பாடல் ரிலீஸ்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அறுவடை’ பாடல் இன்று வெளியாகிறது.
கங்குவா டிரெய்லர் ரிலீஸ்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்