டாப் 10 நியூஸ்: நீட் பிஜி தேர்வு முதல் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழா வரை!

அரசியல்

பயிர் ரகங்களை வெளியிடும் மோடி!

பருவநிலையைத் தாங்கி, அதிக விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடுகிறார்

நீட் பிஜி தேர்வு!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வை இரண்டு‌ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள்.

தேசியக்கொடி வாகனப்பேரணி!

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று தேசியக்கொடி வாகனப்பேரணியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைக்கிறார்.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு!

ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

வினேஷ் போகத் வழக்கு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100கி எடை கூடியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒலிம்பிக் நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை வேளச்சேரியில் இன்று ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்ட சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் யூ டர்ன் திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்ட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 145-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நெதர்லாந்து – கனடா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து – கனடா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: மலச்சிக்கல்… ஆயுர்வேதம்  சொல்லும் எளிய தீர்வு!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கரம் மசாலா, கறி மசாலா… எது பெஸ்ட்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *