டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தேர்தல் பிரச்சாரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் – கடலூர், விழுப்புரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – திருப்பூர். ஈரோடு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – வட சென்னை, திருவள்ளூர்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஏப்ரல் 5) வெளியிடுகிறார்.

தபால் வாக்குப்பதிவு!

தமிழகத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

மயிலாடுதுறை பள்ளிகள் விடுமுறை!

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாடுவதன் காரணமாக இன்று அப்பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை!

ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள சென்னை – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 21-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் இயக்கம்!

சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத், சென்னை மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத், சென்னை அணிகள் மோதுகின்றன.

இன்றைய திரையரங்கு ரிலீஸ்!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கள்வன், வல்லவன் வகுத்ததடா, வொயிட் ரோஸ், டபுள் டக்கர், ஒரு தவறு செய்தால், இரவின் கண்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்

சம்மர் டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு ஐந்து ஈஸி டிப்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *