டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

தேர்தல் பிரச்சாரம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நீலகிரி, கோவை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – சென்னை, ஸ்ரீபெரும்புதூர்

காவிரி நீர் மேலாண்மை கூட்டம்!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் இன்று (ஏப்ரல் 4) நடைபெறுகிறது.

உயிர் தமிழுக்கு பாடல்!

ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் நடிக்கும் உயிர் தமிழுக்கு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத், பஞ்சாப் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

மயிலாடுதுறை பள்ளிகள் விடுமுறை!

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் ஏழு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

அருண் விஜய் புதிய படம்!

அருண் விஜய் நடிக்கும் 38-வது படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 20-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஓமன், நமீபியா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஓமன், நமீபியா அணிகள் மோதுகின்றன

வந்தே பாரத் ரயில் சேவை!

பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: நரையை மறைக்க மருதாணிப்பொடியைப் பயன்படுத்தாதீர்கள்!

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி சட்னி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel