டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

அண்ணாமலை ரோடு ஷோ!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 21) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

இறைச்சி கடைகள் மூடல்!

மகாவீர் ஜெயந்தியை ஒட்டி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சி கூடங்கள் மற்றும் ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தேசிய குடிமைப்பணிகள் நாள்!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்ஸ் ஆகிய குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பை கெளரவப்படுத்துவதற்காக, இன்று இந்தியா முழுவதும் தேசிய குடிமைப்பணிகள் நாள் கொண்டாடப்படுகிறது.

பாரதிதாசன் நினைவு நாள்!

கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 60-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா!

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.

பெங்களூரு – கொல்கத்தா மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகளும், மற்றொரு போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகளும் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 36-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டென்னிஸ் இறுதிப் போட்டி!

பார்சிலோனா சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் – நார்வேயின் காஸ்பர்ரூட் இன்று மோதுகின்றனர்.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: மீன்பிடி தடை காலத்தில் நல்ல மீன்கள் வாங்குவது எப்படி?

நடராஜனின் பந்துவீச்சில் பதுங்கிய டெல்லி… அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share