தமிழ்நாடு வாக்கு சதவிகிதம்!
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முழு விவரங்களை இன்று (ஏப்ரல் 20) மதியம் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
தஞ்சை உள்ளூர் விடுமுறை!
தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேட்- பி நுழைவுத் தேர்வு!
நாடு முழுவதும் முதுநிலை பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கான கேட் – பி நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.
சிறப்பு ரயில்!
மக்களவை தேர்தல் முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி – சென்னை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது.
சித்திரை திருவிழா!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாளை ஒட்டி இன்று திக் விஜயம் நடைபெறுகிறது.
பைண்டர் ரிலீஸ்!
வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் சார்லி நடித்த பைண்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 34-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி – ஹைதராபாத் மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை
சரவெடியாய் வெடித்த தோனி… சொதப்பிய சிஎஸ்கே : லக்னோ அபார வெற்றி!