டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல்!

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல்!

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மெட்ரோ ரயில் சேவை!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சைரன் ஓடிடி ரிலீஸ்!

ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி‌ நடித்த சைரன் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

சித்திரை திருவிழா!

மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் திருநாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 34-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லக்னோ – சென்னை மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ – சென்னை அணிகள் மோதுகின்றன.

திரையரங்கு காட்சிகள் ரத்து!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓமன் – நேபாளம் மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஓமன் – நேபாளம் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா

IPL 2024 : மும்பையை அச்சுறுத்திய அஷுதோஷ் சர்மா… போராடி தோற்ற பஞ்சாப்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *