டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தேர்தல் பிரச்சாரம்!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா – ராமநாதபுரம், ரோடு ஷோ

திமுக தலைவர் ஸ்டாலின் – சென்னை, திறந்தவெளி வாகன பிரச்சாரம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – விருதுநகர், மதுரை, சிவகங்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – கோவை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – புதுச்சேரி

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவை தேர்தலை ஒட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருச்சி உள்ளூர் விடுமுறை!

சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா!

மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று மீனாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தபால் வாக்கு!

சென்னை மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 31-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தான், கொல்கத்தா மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

சார்லி சாப்ளின் பிறந்தநாள்!

நகைச்சுவை கலைஞர் சார்லி சாப்ளின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பஹ்ரைன், கம்போடியா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் பஹ்ரைன், கம்போடியா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் கோஸ் கறி

பியூட்டி டிப்ஸ்: மற்றவர்களிடமிருந்து விலக வைக்கும் வாய் துர்நாற்றம்…  தீர்வு என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *