டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தேர்தல் பிரச்சாரம்!

பிரதமர் மோடி – நெல்லை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே – புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்

திமுக தலைவர் ஸ்டாலின் – திருவள்ளூர், வட சென்னை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – மத்திய சென்னை, தென் சென்னை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – மதுரை, தென்காசி, விருதுநகர்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – பொள்ளாச்சி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – சிதம்பரம், கடலூர்

அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வருகிறது.

தேர்தல் விளம்பர வழக்கு!

திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தபால் வாக்கு!

சென்னை மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்த தவறிய வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று வாக்களிக்கலாம்.

மீன்பிடி தடைக்காலம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்குகிறது.

ரயில்வே போலீஸ் விண்ணப்பம்!

ரயில்வே போலீசில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

ரத்னம் டிரெய்லர் ரிலீஸ்!

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

பெங்களூரு, ஹைதராபாத் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 31-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்

ரோகித் சர்மா சதம் வீண்… சென்னைக்கு வெளியே முதல் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *