டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

தேர்தல் பிரச்சாரம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சிதம்பரம், பெரம்பலூர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – மதுரை, தென்காசி, விருதுநகர்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – திருப்பூர், கோவை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நாகப்பட்டினம், மயிலாடுதுறை

பாஜக தேர்தல் அறிக்கை!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 14)  வெளியிடுகிறார்.

அம்பேத்கர் பிறந்தநாள்!

அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தமிழக அரசு சார்பில் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகளும், மற்றொரு போட்டியில் மும்பை, சென்னை அணிகளும் மோதுகின்றன.

The G.O.AT முதல் பாடல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் The G.O.AT படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

தேர் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 30-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சித்திரை திருநாள்!

சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓமன் – கம்போடியா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஓமன் – கம்போடியா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!

IPL 2024 : மீண்டும் போராடி தோற்ற பஞ்சாப்… த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel