டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தலைவர்கள் பிரச்சாரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா – கன்னியாகுமரி ரோடு ஷோ, நாகப்பட்டினம், தென்காசி

திமுக தலைவர் ஸ்டாலின் –  திருப்பூர், நீலகிரி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – விழுப்புரம், கள்ளக்குறிச்சி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – கரூர், நாமக்கல், தேனி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் –  பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்கக்கோரி இன்று‌ (ஏப்ரல் 13) முதல் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தபால் வாக்கு கடைசி நாள்!

சென்னை மாவட்டத்தில் உள்ள போலீசார் தபால் வாக்கு செலுத்த இன்று கடைசி நாளாகும்.

அமமுக தேர்தல் அறிக்கை!

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிடுகிறார்.

விநாடி வினா போட்டி!

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக இன்றும் நாளையும்‌ சென்னை ரிப்பன் மாளிகையில் மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விநாடி வினா போட்டி நடைபெறுகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 29-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பஞ்சாப் – ராஜஸ்தான் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

குவைத் – கம்போடியா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் குவைத் – கம்போடியா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024 : வீறுநடை போட்ட லக்னோ… சொந்த மைதானத்தில் வீழ்த்திய டெல்லி!

அமித் ஷாவும்… அடுத்த தேர்தலும்… : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *