டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தேர்தல் பிரச்சாரம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி – நெல்லை, கோவை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா – மதுரை ரோடு ஷோ

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – கிருஷ்ணகிரி, சிதம்பரம், தஞ்சாவூர் ரோடு ஷோ

திமுக தலைவர் ஸ்டாலின் – கோவை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நாமக்கல், சேலம்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை

சென்னை – நெல்லை சிறப்பு ரயில்!

கோடைக்கால கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று (ஏப்ரல் 12) முதல் மே 31-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் துவங்குகிறது.

லக்னோ – டெல்லி மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிரேமலு ஓடிடி ரிலீஸ்!

கிரிஷ் இயக்கத்தில் நஸ்லேன், மமிதா பைஜூ நடித்த பிரேமலு திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆதிகேசவ பெருமாள் பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சப்தம் டீசர் ரிலீஸ்!

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள சப்தம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

நேபாள், மலேசியா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள், மலேசியா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கு ஏற்றதா ஐஸ் வாட்டர் ஃபேஷியல்?

கிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *