தேர்தல் பிரச்சாரம்!
பிரதமர் மோடி – வேலூர், மேட்டுப்பாளையம்
திமுக தலைவர் ஸ்டாலின் – தேனி, திண்டுக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – பொள்ளாச்சி, திருப்பூர்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – மதுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கோவை, ஈரோடு
வேட்பாளர்கள் பெயர், சின்னம்!
சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் சின்னம், பெயர் பொருத்தும் பணி இன்று (ஏப்ரல் 10) நடைபெற உள்ளது.
ஆர்.எம்.வீரப்பன் இறுதிச்சடங்கு!
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.
சபரிமலை நடை திறப்பு!
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
நீட் தேர்வு!
மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
தி ப்ஃரூப் டீசர் ரிலீஸ்!
ராதிகா மாஸ்டர் இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்த தி ப்ஃரூப் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 24-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் என் 250 பைக்!
பஜாஜ் நிறுவனத்தின் என் 250 வெர்ஷன் பைக் இன்று முதல் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ராஜஸ்தான், குஜராத் மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மல்ட்டி ஃப்ரூட் சாலட்
IPL 2024 : கடைசி ஓவரில் பதற வைத்த உனத்கட்… த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!