தேர்தல் பிரச்சாரம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – அரக்கோணம், வேலூர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – தேனி, திண்டுக்கல்
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 1) முதல் 7 சுங்கச்சாவடிகளில் ரூ.20 வரை சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
வர்த்தக சிலிண்டர் விலை!
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதத்தின் முதல் நாளான இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் துவங்குகிறது.
ஸ்டார் பாடல் ரிலீஸ்!
இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் இரண்டாம் பாடல் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 17-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி படப்பிடிப்பிற்கு தடை!
கோடை சீசன் துவங்கியுள்ளதால் நீலகிரியில் இன்று முதல் ஜூன் மாதம் வரை சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போர்டு விநியோகம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் கற்பித்தலுக்கான நவீன ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட உள்ளது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மும்பை, ராஜஸ்தான் மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி
CSKvsDC : டெல்லிக்கு முதல் வெற்றி… தோற்றாலும் தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!