டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தொழிற்சங்கத்துடன் ஆலோசனை!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா தொடர்பாக இன்று (ஏப்ரல் 24) தமிழக அரசு முக்கிய தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறது.

ஓபிஎஸ் மாநாடு!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் இன்று மாலை மாநாடு நடைபெறுகிறது.

குடியரசு தலைவர் ஹரியானா பயணம்!

ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று ஹரியானா செல்கிறார்.

வாட்டர் மெட்ரோ போக்குவரத்து!

நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று கேரளாவில் தொடங்கி வைக்கிறார்.

ஓபிஎஸ் மேல்முறையீடு – இறுதி விசாரணை!

அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

பஞ்சாயத் ராஜ் தினம்!

நாடு முழுவதும் இன்று பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அயலான் அப்டேட்!

 சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள, அயலான் படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு இன்று அறிவிக்க உள்ளது.

கொரோனா பரவல் நிலவரம்!

தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் 102 பேருக்கும் கோவையில் 68 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 338வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் மாநாடு : அதிமுக அலுவலகம் வடிவில் மேடை!

அமைச்சர் நேருவிடம் பிரபு வைத்த முக்கிய கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *