முதல்வர் புகைப்பட கண்காட்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி ஏப்ரல் 23ஆம் தேதி(இன்று) முதல் 30ம் தேதி வரை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வானிலை அப்டேட்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
எடப்பாடி மதுரை பயணம்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை செல்கிறார்.
உலக புத்தக தினம்!
உலக புத்தக தினத்தை முன்னிட்டு சென்னையில் 18அரசு நூலகங்களில் இன்று சிறப்பு சொற்பொழிவு, கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
ஐபிஎல் அப்டேட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 337வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பரவல்!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 519ஆக உள்ளது. சென்னையில் 104பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூடை பந்து போட்டி தொடக்கம்!
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
பிறந்தநாள் கொண்டாடும் பாடகி ஜானகி
ரசிகர்கள் தான் எனக்கு விருது என்று கூறும் பின்னணி பாடகி ஜானகி இன்று தனது 85வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
குன்னூரில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா!
சம்மரில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!