சித்தராமையா பதவி ஏற்பு!
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் , துணை முதல்வராக டி. கே. சிவக்குமாரும் இன்று (மே 20)பதவி ஏற்கின்றனர்.
பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின்
கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாஜக ஆர்ப்பாட்டம்!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
ஐபிஎல் அப்டேட்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று சிஎஸ்கே அணி டெல்லி அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.
பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பம்!
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வி துறை அறிவித்துள்ளது.
வீரன் டிரெய்லர்!
ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 364ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதுபோன்று ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜி7 மாநாடு!
இன்று ஜப்பானில் நடைபெறும் ஜி7 நாடுகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் குவாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
உலக தேனீ தினம்!
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் இன்று உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது.
வாடகை அறை முதல் உச்ச நீதிமன்றம் வரை… யார் இந்த கே.வி.விஸ்வநாதன்?