ஆளுநர் ரவி வழக்கு!
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ரவி நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி இன்று (பிப்ரவரி 7) விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Top ten news today
நதிநீர் இணைப்பு திட்டம்!
நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் தாமிரபரணியாறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
மமக 17-ஆம் ஆண்டு துவக்க விழா!
மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆம் ஆண்டு துவக்க விழா சென்னை மண்ணடியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
செய்முறை தேர்வு!
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ்!
நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல், ஜோஜு ஜோர்ஜ் நடித்துள்ள நரயனேப்டே மூனான்மக்கள், மேத்யூ நடித்துள்ள இன்டர்ஸ்டெல்லர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்!
ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர், வருண் தவான் நடித்துள்ள பேபி ஜான், தி கிரேட்டஸ் ரிவல்ரி இந்தியா Vs பாகிஸ்தான் ஆவணத்தொடர் ஆகியவை இன்று ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
சென்னையில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உகாண்டா, பக்ரைன் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் உகாண்டா, பக்ரைன் அணிகள் மோதுகின்றன. Top ten news today