தைப்பூசம் தேரோட்டம்! Top Ten News Today February 11 2025
பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (பிப்ரவரி 11) நடைபெறுகிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
பிரான்சில் மோடி!
அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிரான்சில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். தொடர்ந்து எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை இல்லை!
தைபூசத்தை முன்னிட்டு இன்று விடுமுறை நாள் என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தெப்பத் திருவிழா!
மதுரையில் ஆண்டுதோறும் நடை பெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மீனாட்சிஅம்மன் எழுந்தருளும் தெப்பத்திருவிழா இன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூடல்!
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி!
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. சுமார் 1000 காளைகள் களமிறங்கும் இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி காலை 7 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது குறித்து இன்று பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கவுள்ளது. Top Ten News Today February 11 2025
ஸ்வீட் ஹார்ட் முதல் சிங்கிள்!
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் படத்தின் முதல் சிங்கிளான ‘Awsum Kissa’ பாடல் இன்று வெளியாகிறது.
வறண்ட வானிலை!
தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்றும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.