வேளாண் பொருளாதார நிபுணர்கள் மாநாடு!
வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 3) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தீரன் சின்னமலை நினைவு நாள்!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
ஆடிப்பெருக்கு விழா!
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தி கோட் பாடல் ரிலீஸ்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிமான்டி காலனி 2 பாடல் ரிலீஸ்!
டிமான்ட்டி காலனி-2’ படத்தின் Why Are We Wandering பாடல் இன்று வெளியாகிறது.
குரோவாசியா, ஸ்பெயின் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் குரேஷியா, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல்லாவரம், தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
ஈரோடு உள்ளூர் விடுமுறை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னை – காட்பாடி இடையே நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ ஜெல்லி