டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

திரவுபதி முர்மு சுற்றுப்பயணம்!

கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (மார்ச் 18) கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.

மேஜர் ஜெயந்த் உடல் அடக்கம்!

அருணாச்சல பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தனியார் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

பந்தக்காட்சி வீதி உலா!

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று பந்தக்காட்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 301-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இசை வெளியீட்டு விழா!

கயல் ஆனந்தி நடிக்கும் இராவண கோட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று துபாயில் நடைபெறுகிறது.

டிக்கெட் விற்பனை!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல்!

மகளிர் ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் உத்திர பிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

INDvsAUS: மிரட்டிய ஸ்டார்க்… வெற்றியைத் தேடி தந்த ராகுல் – ஜடேஜா ஜோடி!

கிச்சன் கீர்த்தனா: வரகு முறுக்கு வற்றல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *