top ten news tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று (மார்ச் 16) 4வது நாளாக நடைபெறவுள்ளது.

குடியரசுத் தலைவர் கேரளா பயணம்!

2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று கேரளா வருகிறார்.

அமலாக்கத்துறை முன் ஆஜர்!

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.

ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை!

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடும் பால் உற்பத்தியாளர்கள் நலசங்க நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்புளூயன்ஸா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 299வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஸ்டடி டிரெய்லர்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள “கஸ்டடி” படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4.51 மணிக்கு வெளியாகவுள்ளது.

மகளிர் ஐபிஎல்!

மகளிர் ஐபிஎல் 2023 இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட் அணிகள் மோதுகின்றன.

விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண  ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள்!

கிச்சன் கீர்த்தனா: வரகு – பச்சை மிளகாய் வற்றல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *