டாப் 10 நியூஸ்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

அரசியல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

18-ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. இன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி-க்கள் பதவியேற்க உள்ளனர்.

சட்டமன்ற மானியக்கோரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் இன்று உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகிய துறைகளின் மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கண்ணதாசன் பிறந்தநாள்!

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

அமராவதி அணை திறப்பு!

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து சோழமாதேவி, கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

விசிக ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

டி20 உலக கோப்பை!

இன்றைய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதுகின்றன.

பா.ரஞ்சித் படம் அப்டேட்!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பின் 9-வது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சீட் ஸ்நாக்ஸ்

கடைசி நேரத்தில் கேன்சல் – அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0