top ten news tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பட்ஜெட் ஒப்புதல் கூட்டம்!

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிவற்றிக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9) கூடுகிறது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்!

புதுச்சேரியில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 292வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படம்!

கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆவது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

கிரிக்கெட் போட்டியை ரசிக்கவிருக்கும் பிரதமர்கள்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணைந்து பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கடைசி போட்டியைப் பார்வையிடவுள்ளனர்.

மகளிர் ஐபிஎல்!

மகளிர் ஐபிஎல் போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் இன்று ஹைதராபாத் மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

ரஷ்ய தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட உக்ரைன் நகரம்!

கிச்சன் கீர்த்தனா: எலும்பு ரசம் !

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts