ஆம் ஆத்மி போராட்டம்
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று(பிப்ரவரி 27) ஆம் ஆத்மி போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு!
மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7மணிக்குத் தொடங்கியது.
விவசாயிகளுக்கு நிதி
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் 13வது தவணையாக விவசாயிகளுக்கு இன்று தலா ரூ.2000நிதி வழங்கப்படவுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் டெல்லி பயணம்
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் துறை ரீதியாக மத்திய அமைச்சர்களை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார்.
சிவமொக்கா விமான நிலையம்
கர்நாடகா சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கல்லூரிகளுக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்கள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்துத் தெரிந்து கொள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு இன்று அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் இன்று 282வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்
தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக டேபிள் டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ் ‘ஸ்டார் கன்டென்டர்’ சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது.
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க்
டப்பிங் கொடுக்காமல் பாங்காக் சென்ற சிம்பு: துரத்தி சென்ற படக்குழு!