டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

அரசியல்

அதிமுக கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று அக்டோபர் 10ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

முதல்வர் ஆலோசனை!

போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அரசின் முக்கிய அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – அமைச்சர் ஆலோசனை!

தீபாவளி பண்டிகைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அமைச்சர் சிவசங்கர் இன்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பொருளியல் நோபல் பரிசு!

2022-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பொருளியல் நோபல் பரிசு ஸ்வீடனில் அறிவிக்கப்படவுள்ளது.

ஆளுநர் மாளிகையில் பாரதம் தொடர்!

ஆளுநர் மாளிகையில் “ஒரே பாரதம் உன்னத பாரதம் – இணைக்கும் பாரதம் தொடர்” என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கி நடைபெறவுள்ளது.

தீவிரவாத தடுப்பு படையை உருவாக்கக் கோரிய வழக்கு!

தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு படையை உருவாக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்குக் காலாண்டு தேர்வு கடந்த மாதம் நடந்தது. தேர்வு முடிந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 9 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

கிரிக்கெட் அப்டேட் : இந்தியா தாய்லாந்து மோதல்!

இந்தியா தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடர் இன்று மதியம் 1 மணிக்கு பங்ளாதேஷில் உள்ள ஷில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

சிலியன் திரைப்பட விழா!

இன்று (அக்டோபர் 10) தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிலியன் திரைப்படவிழா சென்னை, நுங்கம்பாக்கத்தின் கல்லூரிச் சாலையில் உள்ள அலையான்ஸ் பிரான்சேஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 142-வது‌ நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“நிதிஷ்குமார் வயது முதிர்வால் பதட்டத்தில் பேசுகிறார்” : பிரசாந்த் கிஷோர்

நயன் விக்கிக்கு டிடி வாழ்த்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

1 thought on “டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

  1. இன்றைய டாப் டென் நியூஸில் அக்டோபர் 10, 2022 காலை 6.20 மணிக்கு பதிவிட்ட செய்தியாக உள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *