டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வரின் இன்றைய நிகழ்வு

மூன்று மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கு: மீண்டும் விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்பு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பணிநிரவல் கலந்தாய்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது.

கொடிநாள் பெருநிறுவன சமூகப் பொறுப்பு மாநாடு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை நடத்தும் ஆயுதப்படைகளின் கொடி நாள் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மாநாட்டின் நான்காம் பதிப்பு புதுடெல்லியில் இன்று நடைபெற உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.

குஜராத்தில் பிரசாரம் ஓய்வு

குஜராத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

துணிவு படப்பிடிப்பு நிறைவு

நடிகர் அஜித் குமார் நடித்துவரும் ‘துணிவு” படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை

சென்னையில் இன்று 192ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபிஃபா கால்பந்து போட்டி

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப் ஏ பிரிவில் ஈகுவடார் – செனகல் அணிகளும், அதே பிரிவில் நெதர்லாந்து – கத்தார் ஆகிய அணிகளும் பி பிரிவில் ஈரான் -அமெரிக்கா ஆகிய அணிகளும், வேல்ஸ் – இங்கிலாந்து ஆகிய அணிகளும் களம் காண இருக்கின்றன.

வானிலை அப்டேட்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு 1989 : சீனாவில் மாணவர் புரட்சி?

“உயிருடன் விளையாடும் ஆளுநர்”: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *