முதல்வரின் மூன்று மாவட்ட நிகழ்ச்சிகள்!
திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 28) முதல்வர் ஸ்டாலின், தொழில் பூங்காவை திறந்து வைத்தல், அகழாய்வுப் பணிகளை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு விண்ணப்பம்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு பொறுப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
ஆதார் இணைக்க சிறப்பு முகாம்!
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன.
ஆஸ்த்ரா ஹிந்த் 22!
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே “ஆஸ்த்ரா ஹிந்த் 22” என்ற கூட்டுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெற உள்ளது.
கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம்!
நடிகர் கெளதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் இன்று திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
ரயில் மறியல் போராட்டம்
டெல்டா மாவட்டங்களை தென்னக ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருவதாகக் கூறி இன்று முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
கைவினைக் கலைஞர்களுக்கு விருது!
2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான ஷில்ப் குரு மற்றும் தேசிய விருதுகளை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் இன்று வழங்குகிறார்.
கால்பந்து போட்டி – மோதும் அணிகள்!
கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் இன்று கேமரூன் – செர்பியா, கொரியா குடியரசு – கானா மற்றும் பிரேசில் – சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 191ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.