டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வர் பேச்சுவார்த்தை!

ஜனவரி 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர்களை இன்று (ஜனவரி 2) முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

கரூர் மாவட்டத்தில் ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தலில் வன்முறையை திமுக கட்டவிழ்த்ததாக அதிமுக சார்பில் இன்று கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சொர்க்க வாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

பண மதிப்பிழப்பு வழக்கு தீர்ப்பு!

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்!

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 226-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இருளர்கள் ஆர்ப்பாட்டம்!

சாதி சான்றிதழ், இருளர்களை சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருளர்கள் பாதுகாப்பு சங்கம் இன்று திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சகுந்தலம் புதிய அறிவிப்பு!

நடிகை சமந்தாவின் சகுந்தலம் திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தாண்டு: பத்து நிமிட தரிசனம் தந்த விஜயகாந்த்

விரைவில் அதிமுக மாநாடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *