டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

திமுக சட்ட கருத்தரங்கம்!

திமுக சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற சட்ட கருத்தரங்கம் இன்று (ஜனவரி 22) மதுரையில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பது குறித்து அக்கட்சி இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

திருமா நூல் வெளியீடு!

எழுத்தாளர் மனோகர் எழுதிய திருமா என் காதலன் புத்தக வெளியீட்டு விழா சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இன்று நடைபெறுகிறது.

பாஜக விவசாய அணி கூட்டம்!

நாமக்கல் மாவட்ட பாஜக விவசாய அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

எஸ்டிபிஐ மாநாடு!

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று திருப்பூரில் கொங்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்!

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செல்ஃபி டிரைலர்!

ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 246-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தானத்தின் கிக் டிரெய்லர்: என்ன ஸ்பெஷல்?

இதுவரை கதை… இப்போது பட்டமா? ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து பயில்வான் ரங்கநாதன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *