தீவுகளுக்கு பெயர் சூட்டல்!
அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23) சூட்டுகிறார்.
சிறுவர்களுக்கு தேசிய விருது!
கலை, வீர தீர செயல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சிறுவர்களுக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்குகிறார்.
திருமண நிகழ்ச்சி!
தேனி மாவட்டத்தில் இன்று நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
சந்தானம் புதிய படம்!
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
அதிமுக பணிமனை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இன்று தேர்தல் பணிமனை அமைக்கிறது.
ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல்!
இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று சேர்க்கப்பட உள்ளது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மைக்கேல் டிரெய்லர்!
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் மைக்கேல் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 247-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா!
லாக் டவுன்: வாட்டிய வறுமை – வியாபாரி தற்கொலை!