டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

குடியரசு தின விழா!

74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றுகின்றனர்.

கிராம சபை கூட்டம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து!

இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பொம்மை பாடல்!

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த பொம்மை படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

பழனி அபிஷேகம்!

பழனி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு விநாயகர், இடும்பன், கடம்பன் கோவில் கோபுரங்களுக்கு இன்று புனிதநீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

காஷ்மீர் திருவிழா!

சென்னை கலாக்ஷேத்ராவில் காஷ்மீர் திருவிழா இன்று தொடங்கி வரும் ஜனவரி 30 வரை நடைபெற உள்ளது.

டிராக்டர் பேரணி!

மத்திய அரசுக்கு எதிராக திருவாரூரில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 250-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைவர்கள் நினைவிடம்!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வானிலை நிலவரம்!

தமிழகம் முழுவதும் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுக : அன்புமணி கடிதம்

மூத்த நடிகர்களை விமர்சித்த பாலகிருஷ்ணா… நாகசைதன்யா பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.