அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 27) ஆலோசனை செய்கிறார்.
திமுக பொற்கிழி விருது!
சேலம் மாவட்டத்தில் 1000 திமுக கழக முன்னோடிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பொற்கிழி விருது வழங்குகிறார்.
பழனி கும்பாபிஷேகம்!
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பிபிசி ஆவணப்படம் திரையிடல்!
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மோடி ஆவணப்படத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாணவர்கள் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட உள்ளனர்.
தோனி தயாரிக்கும் படம்!
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறது.
அமமுக ஆலோசனை கூட்டம்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து மோதல்!
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.
இறைச்சி கடைகளுக்கு தடை!
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகராட்சியில் இன்று இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 251-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையின் இளம் பெண் கவுன்சிலர் கைது!
விவசாயிகளுக்கான மாபெரும் போட்டி இந்தாண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி