டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

காவல்துறை மாநாடு!

டெல்லியில் இன்று (ஜனவரி 21) நடைபெறும் அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள், மத்திய காவல்படை தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

ஆசிரியர்களுக்கான தொகுப்பூதிய உயர்வு!

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தியதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

அதிமுக, பாஜக பேச்சுவார்த்தை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

திருமுறை தலங்கள் நிகழ்ச்சி!

சென்னை மயிலாப்பூரில் இன்று சுதந்திரா அறக்கட்டளை நடத்தும் திருமுறைத் தலங்கள் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

தை அமாவாசை!

இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்பட உள்ளது.

இந்தியா, நியூசிலாந்து மோதல்!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

பவானி சாகர் அணை!

பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 12,000 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 245-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சுசீந்திரன்

”அவமானப்படுத்திவிட்டார் கலெக்டர்” -முதல்வர் வரை புகார் செய்த மத்திய அமைச்சர் முருகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel