டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மொழிப்போர் தியாகிகள் தினம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

நூல் வெளியீடு!

தமிழின படுகொலை ஆவண நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது.

போக்குவரத்து தடை!

மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை இன்று முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

சமக நிலைப்பாடு அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

பொம்மை நாயகி டிரைலர்!

யோகிபாபு நடித்த பொம்மை நாயகி படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை!

சென்னையில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் ஏலம்!

மகளிர் ஐபிஎல் தொடர் அணிகளுக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.

மின் தடை!

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக ஐடி காரிடர் பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிஜிட்டல் திண்ணை: பாஜக இல்லாமலே இரட்டை இலை- எடப்பாடி சொன்ன சீக்ரெட்!

ஆஸ்கர் ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ’ஆர்.ஆர்.ஆர்.’

அதிமுக குறித்து பாஜக சொல்வதற்கு ஒன்றுமில்லை : அண்ணாமலை பளீச்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.