பள்ளிகள் செயல்படும்!
வடகிழக்கு பருவமழை காரணமாக விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 28) அனைத்து பள்ளிகளும் செயல்படும்.
50 நூல்கள் வெளியீடு!
திருப்பூர் புத்தக திருவிழாவில் இன்று பாரதி புத்தகாலயத்தின் சார்பில் 50 சிறார் நூல்களை 50 குழந்தைகள் வெளியிட்டு 50 குழந்தைகள் பெறுகிறார்கள்.
அன்புமணி கலந்துரையாடல்!
கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கலந்துரையாடுகிறார்.
இந்து தர்ம எழுச்சி மாநாடு!
கடலூர் மாவட்டத்தில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதான இந்து தர்ம எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
கோயில் நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்!
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட கோரி இன்று காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கோயில் நிலங்களில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
காந்தி நினைவு நாள் கருத்தரங்கம்!
திருச்சி மாவட்டத்தில் இன்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில் காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
பழனி பாபா நினைவு நாள் பொதுக்கூட்டம்!
இன்று பழனி பாபா 28-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 252-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்!
மேம்பால கட்டுமான பணி காரணமாக சென்னை தி.நகரில் இன்று முதல் 9 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கண்ணம்மா பேட்டை சந்திப்பு, மூப்பராயன் தெரு இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வங்கி ஊழியர்கள் 2 நாள் போராட்டம் ஒத்திவைப்பு!
இந்தியாவின் அதிர்ச்சி தோல்விக்கு காரணமான ஒரு ஓவர்!