டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பரிசு வழங்கும் விழா!

அரசுப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) பரிசுகள் வழங்குகிறார்.

குடியரசு தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து புகார் அளிக்க உள்ளார்.

பொங்கல் சிறப்பு பேருந்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

செவிலியர்கள் பேரணி!

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் இன்று தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

ஆனந்த சாரல் நிகழ்ச்சி!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆனந்தா கல்லூரியில் நடைபெறும் ஆனந்த சாரல் 2023 நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.

கிக் படம் அப்டேட்!

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.

சமக, எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

ஆளுநருக்கு எதிராக சமத்துவ மக்கள் கழக தலைவர், எஸ்டிபிஐ கட்சிகள் இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 236-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா, இலங்கை மோதல்!

இந்தியா, இலங்கை அணிகள் மோதும்‌ 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆளுநர் உரையில் அதிகளவில் பொய்யான தகவல் : அண்ணாமலை

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0