ராகுல் நடைபயணம் நிறைவு!
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை இன்றுடன் (ஜனவரி 30) நிறைவு செய்கிறார்.
காந்தி நினைவு தினம்!
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று காந்தியடிகள் 76-வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இரட்டை இலை சின்னம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அனைத்துக் கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஜி20 தொடக்க நிலை மாநாடு!
புதுச்சேரியில் இன்று ஜி20 தொடக்க நிலை மாநாடு துவங்குகிறது.
கிரிமினல் படம் அப்டேட்!
தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
போக்குவரத்து மாற்றம்!
பாலம் கட்டும் பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தசரா டீசர் வெளியீடு!
ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 254-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு!
பிபிசி ஆவணப்படம்: கேரள ஆளுநர் கேள்வி!