இலக்கிய திருவிழா!
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 6) கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
புத்தக கண்காட்சி!
46-வது சென்னை புத்தக கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு!
அதிமுக பொதுக்குழு இறுதிக்கட்ட வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
கள்வன் படம் அப்டேட்!
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கள்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது.
இளைஞர் 20 மாநாடு இலட்சினை வெளியீடு!
மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று இளைஞர் 20 மாநாட்டின் கருப்பொருட்கள், இலச்சினை மற்றும் இணையதளத்தை தொடங்கி வைக்கிறார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அமமுக ஆலோசனை கூட்டம்!
அமமுக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 232-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மதம், சாதி, சாமி : எந்த வேற்றுமையும் இல்லை – முதல்வர்
சூர்யா கொடுத்த ‘ஜெய்பீம்’ அப்டேட்!