டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

டிஜிட்டல் இந்தியா விருதுகள்!

2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 7) வழங்குகிறார்.

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

அன்புமணி நடைபயணம்!

என்.எல்.சி நிறுவனம் நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்கிறார்.

செவிலியர்கள் பேச்சுவார்த்தை!

பணி நீட்டிப்பு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு!

தாம்பரத்தில் இன்று மாலை 6 மணி அளவில் ஜல்லிக்கட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் பள்ளிகள் இயங்கும்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா படம் டீசர்!

கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா படத்தின் டீசர் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகவுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 79 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா, இலங்கை மோதல்!

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 232-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அறங்காவலர்கள் தேர்வு: நீதிமன்றம் உத்தரவு!

உலகத் தர தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0