டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

நலத்திட்ட பணிகள்!

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) திறந்து வைக்கிறார்.

முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

விசிக ஆர்ப்பாட்டம்!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஹாக்கி போட்டி!

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – வேல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

சதுரகிரி செல்ல அனுமதி!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் 22-ஆம் தேதி வரை மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி!

திருச்சி அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

பழனி ரோப் கார்!

பழனி மலைக்கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிக்காக இன்று நிறுத்தப்படவுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பி.எஸ்.என்.எல் விற்பனை முகாம்!

புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நடைபெறவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 243-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இடைத்தேர்தலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம்?

“தனுஷ் 50”: சன் பிக்சர்ஸ் புது அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *