மின் இணைப்பு!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் விவசாய பயனாளர்களில் 50,000-வது நபருக்கு மின் இணைப்பு ஆணையினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) வழங்குகிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு!
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
துணிவு, வாரிசு ரிலீஸ்!
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
உண்டியல் தொகை எண்ணும் பணி!
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உண்டியல் திறப்பு மற்றும் தொகை கணக்கீடு செய்யும் பணிகளை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காணும் வகையில் வலைதளத்தில் நேரலை செய்யும் பணியை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைக்கிறார்.
பால் விலை உயர்வு!
புதுச்சேரியில் பாண்லே பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 உயருகிறது.
தமிழ் நாள் பெருவிழா!
சென்னை அண்ணா நகரில் இன்று மாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகி இல.நடராசன் அவர்களின் நினைவாக தமிழ் நாள் பெருவிழா நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ராவண கோட்டம் டிரைலர் வெளியீடு!
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடித்துள்ள ராவண கோட்டம் படத்தின் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
வடகிழக்கு பருவமழை நிறைவு!
தமிழகம், புதுச்சேரியில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை நிறைவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.