ஜல்லிக்கட்டு போட்டி!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 8) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
கோவில் விழா!
இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தின் 33-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு நாளில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.
அமமுக ஆலோசனை கூட்டம்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அன்புமணி நடைபயணம்!
என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் இன்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நடைபயணம் செய்கிறார்.
போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி மண்டபத்திலிருந்து உத்தமர் காந்தி சிலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
நூல் வெளியீட்டு விழா!
தேனியில் இன்று கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
போகி பொருட்கள்!
போகி பண்டிகையை முன்னிட்டு தேவை இல்லாத பொருட்களை எரிப்பதை தடுக்க இன்று முதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பொருட்களை வீடு, வீடாக சென்று சேகரிக்க உள்ளனர்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 232-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: பொங்கல் வைக்கப் போறீங்களா… இதோ உங்களுக்கான டிப்ஸ்!
அமைச்சருடனான பேச்சு வார்த்தை தோல்வி: தொடரும் செவிலியர்கள் போராட்டம்!