பிளஸ் டூ ஹால் டிக்கெட்!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிமுக பொதுக்குழு வழக்கு!
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோரது அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
போலியோ சொட்டு மருந்து!
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து போடப்படுகிறது.
வாரிசு ட்ரெய்லர்!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5மணிக்கு வெளியாக உள்ளது.
உள்ளூர் விடுமுறை!
ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழக்கு!
பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கு மூலம் செலுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.
சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!
மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்றுமுதல் வரும் ஏழாம் தேதிவரை நான்கு நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை விழா!
கோவை மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கோவையும் விழா இன்று தொடங்கி வரும் 8ம்தேதி வரை நடைபெற உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 230-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒருலிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் நேற்று புதிதாக 10பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 35,94,466ஆக உயர்ந்துள்ளது.
கட்டபொம்மன் ஊர்வலத்தில் கலவரம்: பெண் எஸ்.ஐ காயம்!
போராடிய இலங்கை : கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா!