சிறார்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறார் விருது பெற்ற விருதாளர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
மார்க்சிஸ்ட் போராட்டம்!
எங்கே எங்கள் மதுரை எய்ம்ஸ் என கேள்வி எழுப்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று மதுரையில் போராட்டம் நடத்துகிறது.
அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழக்கு!
மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதிமுக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜேஇஇ தேர்வு!
ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ முதல் கட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது.
டெல்லி மேயர் தேர்தல்!
பாஜக, ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடையேயான கடும் மோதலையடுத்து ஒத்திவைக்கப்பட்ட டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
திருப்பதி இலவச டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டோக்கன்கள் இன்று இணையதளத்தில் வெளியாகிறது.
இந்தியா – நியூஸிலாந்து கிரிக்கெட்!
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.
வானிலை அப்டேட்!
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல் டீசல் விலை!
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சரத்குமார் ஆலோசனை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மாநில மொழிகளில் தீர்ப்பு: ராமதாஸ் வரவேற்பு!
அமர்க்களமாக நடந்தேறிய கே.எல்.ராகுல் – ஆதியா ஷெட்டி திருமணம்!
டிஜிட்டல் திண்ணை: போட்டி உறுதி… ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக ஆதரிக்கும்- ஓபிஎஸ் வைக்கும் செக்!