டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today september 8 2023

ஜி20 மாநாடு!

டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு உலக தலைவர்கள் இன்று (செப்டம்பர் 8) வருகை தர உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை!

மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

அமைச்சர் பெரியசாமி வழக்கு விசாரணை!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கிய வழக்கில் அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்டது மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்டதை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்க உள்ளார்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் டெல்லியில் இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

தி.நகர், பொன்னேரி மின் வாரிய கோட்டத்தில் நாளை நடைபெறவிருந்த மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 475வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓடிடியில் ‘லவ்’!

பரத், வாணி போஜன் நடிப்பில் வெளியான லவ் திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

’துடிக்கும் கரங்கள்’ ரிலீஸ்!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை!

ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான அடுத்தகட்ட டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

கிச்சன் கீர்த்தனா: முட்டைத் தொக்கு

இந்தியனா? பாரதீயனா? கமல்-ஷங்கர் ஃபைட்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share