மத்திய அமைச்சர் இலங்கை பயணம்!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (செப்டம்பர் 2) இலங்கை செல்ல உள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்1!
சூரியனின் ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ தயாரித்துள்ள ஆதித்யா எல்1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.
அமெரிக்க கல்வி கண்காட்சி!
அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பங்கேற்கும் ‘அமெரிக்க கல்விக் கண்காட்சி-2023’ சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை!
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக 15 மாவட்ட பொறுப்பாளர்களுடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!
மீன்களின் விலையை வியாபாரிகள் குறைத்ததால் ராமேஸ்வரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
புயல் பேரிடர் ஒத்திகை பயிற்சி!
கடலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் இன்று புயல் பேரிடர் மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு கண்காட்சி!
பழைய வாகனங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் விழிப்புணர்வு கண்காட்சியானது கோவை கொடிசியா வளாகத்தில் இன்று முதல் நடக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 469வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை!
ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மாலை 3 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.
கிச்சன் கீர்த்தனா: சிக்கன் டிக்கா பிரியாணி
மத்திய அரசு நிறுவனத்தில் நடிகர் மாதவனுக்கு புதிய பதவி!