முதல்வர் ஆலோசனை!
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) இறுதி கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
முற்றுகை போராட்டம்!
சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக கோரியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம்!
இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விடுமுறை அறிவித்துள்ளார்.
கடை அடைப்பு போராட்டம்!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டத்திற்குத் தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தொட்டபெட்டாவிற்கு செல்ல தடை!
சாலை சீரமைப்பு பணி காரணமாக உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைக்கு இன்று முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 478வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜிகர்தண்டா 2 டீசர்!
‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் டீசரை நடிகர்கள் தனுஷ், துல்கர் சல்மான், மகேஷ் பாபு, ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் இன்று மதியம் 12.12 மணிக்கு வெளியிட உள்ளனர்.
ஆசியக் கோப்பை!
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி இன்று நடைபெற உள்ளது.
சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்!
கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் மோதகம்