இராஜராஜ சோழன் சதய விழா
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்று(அக்டோபர் 24) கொண்டாடப்படுகிறது.
ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம்!
அதிக கட்டணம் வசூலித்ததாக ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
விஜயதசமி மாணவர் சேர்க்கை!
விஜயதசமியை முன்னிட்டு இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா தினம்!
ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம், அதன் சாதனைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று ஐ.நா. தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மருது பாண்டியர்கள் நினைவு தினம்!
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 521வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’நயன்தாரா 75’ க்ளிம்ஸ் வீடியோ!
ஜெய், நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ இன்று மாலை 5.40 மணிக்கு வெளியாக உள்ளது.
தளபதி 68 பூஜை வீடியோ!
நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாக உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல்
டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்!